News Just In

9/02/2024 09:52:00 PM

தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு இந்திய தூதரகத்தில் இருந்து விரைந்த தொலைபேசி அழைப்புக்கள்!




எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

ஒரு புறம் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ள நிலையில், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகரித்து வருவதுடன் கருத்துக் கணிப்புக்களும் வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில், தமிழர் தரப்பில் இருந்தும் பொது வேட்பாளர் ஒருவர் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார். அத்தோடு, தமிழர் தரப்பில் மற்றொரு சாரார் தென்னிலங்கையில் இருந்து களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், தமிழரசுக் கட்சியின் எம்பிக்கள் சிலருக்கு இந்திய தூதரகத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் தொலைபேசி அழைப்பெடுத்து கலந்துரையாடியுள்ளதாக புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்

No comments: