News Just In

9/02/2024 06:05:00 AM

தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தால் எழுந்தது புதிய சர்ச்சை..!



ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிப்பதாக தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்த மத்தியகுழு கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், "வழமையாக மத்திய குழு கூட்டத்திற்கு அக்குழு உறுப்பினரான எனக்கு கடிதம் அனுப்பப்படும்.

ஆனால், இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இன்று கூட்டம் நடைபெற்றது தொடர்பில் எனக்கு தெரியாது.

எனவே, எனக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளமையால் இது குறித்து நான் கட்சியின் செயலாளருக்கு செய்தி அனுப்பியிருக்கின்றேன்.

குறித்த அறிவிப்பின் மூலம், என்னை அழைக்காமல் தமிழரசு கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளேன்" என கூறியுள்ளார்.

No comments: