News Just In

9/15/2024 07:20:00 PM

இலங்கை இராணுவத்திற்கு ஆதரவான ஆவணத்தில் கையொப்பமிட்ட சாணக்கியன்!



2009 ஆம் ஆண்டு நாட்டில் நிறைவடைந்த யுத்த முடிவில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மாத்திரமே உயிரிழந்தனர் என்ற தீர்மானத்துக்கு ஈபிடிபி தரப்பு மாத்திரம்தான் கையொப்பமிட்டுள்ளது என எண்ணிக்கொண்டிருந்தால் கிழக்கில் இரா. சாணக்கியனும் அவர்களுடன் சேர்ந்து கையொப்பமிட்டுள்ளார் என கரைச்சி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு இலங்கை தமிழரசுக்கட்சி ஆதரவளித்துள்ள நிலையில், தமிழர்களுக்கான தீர்வு எதனையும் முன்வைக்காத அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு எதிராக சுமந்திரனால் குரல் எழுப்ப முடியுமா எனவும் அவர் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் முகவர்களை வைத்து வழக்கு தாக்கல் செய்த சுமந்திரனால் சஜித்துக்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியுமா எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொது விருப்பு இல்லாமல் தனது முடிவுதான் இறுதி என கூறும் சுமந்திரனின் கருத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

No comments: