News Just In

8/18/2024 02:53:00 PM

நாட்டின் வீழ்ச்சியைக் கண்டு ஓடி ஒழித்த கோழைகளிடம் நாட்டை ஒப்படைக்க கிழக்கு மக்கள் தயாரில்லை!

அம்பாறை மாவட்ட கரையோர ஐ. தே.கட்சி ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல்



(அஸ்ஹர் இப்றாஹிம்)
தனிப்பட்ட விருப்ப வெறுப்புகளை மறந்து எதிர்கால நாட்டின் நலனில் அக்கறை கொண்டு இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கரத்தை பலப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட கரையோரப்பிதேசங்களுக்கான ஐக்கிய தேசிய கட்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
சீரழிக்கப்பட்டு ,சின்னாபின்னமான நிலையில் அதி பாதாளத்திற்கு தள்ளப்பட்டிருந்த இந்த நாட்டை மீட்டு பல சவால்களுக்கு மத்தியில் தனியொருவராக துணிந்து நின்று பொறுப்பேற்று ,வீழ்ந்த பொருளாதாரத்தை மிக குறுகிய காலத்தில் மீட்டெடுத்த பெருமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களையே சாரும்.

வீழ்ச்சியை கண்டு ஓடி ஒழிந்த கோழைகள் இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றினால் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்ற நிலைமைக்கு ஆளாகலாம். இந்த வரிசை வாழ்க்கைக்கு அனைவரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனது தனிப்பட்ட அஜந்தாவிற்கும் சுக போக வாழ்கைக்கும் கட்சியை அடகு வைத்து நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை பலிக்கடாவாக்க எடுத்திருக்கும் இம் முயற்சி நிச்சயம் தோல்வியில் முடிவடையும்.

இவர்கள் கூறி வாக்களிக்கும் நிலையில் இன்று முஸ்லிம் மக்கள் இல்லை.மக்கள் பட்ட கஷ்டங்களையும் துயர்களையும் இன்னும் மறக்கவில்லை.

காலத்திற்கு காலம் தேர்தல் மேடைகளில் தோன்றி வீர வசனம் பேசி மக்களை உசுப்பேத்தி வாக்குகளை கொள்ளையடித்து மந்திரி பதவிகளுக்கு சோரம் போன காலம் மலையேறி விட்டது. மக்கள் நாட்டின் தற்போதய நிலமையை அறிந்து வழிப்போக்கர்களிடம் நாட்டை ஒப்படைக்க போவதில்லை என்பதனை எதிர்வரும் தேர்தல் இவர்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்தும்.என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: