News Just In

8/28/2024 02:05:00 PM

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான மக்கள் பணிமனை திறந்து வைப்பு.!



மாளிகைக்காடு செய்தியாளர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான மக்கள் பணிமனை திறப்பு விழா சாய்ந்தமருது -11 கல்யாண வீதியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முன்னாள் பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினருமான ஏ.எல். சலீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்கள் மக்கள் பணிமனையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம் எஸ் அமீர் அலி, கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கே.அப்துல் றஸாக், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்களான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர், எம்.ஏ. அன்சில், எம்.ஐ.எம். மாஹிர், கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ரிஷ்லி முஸ்தபா, உயர்பீட உறுப்பினர் எம்.எஸ்.முபீன் ,கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: