News Just In

8/24/2024 04:07:00 PM

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் அன்னதான மடம் அமைக்கும் பணிககான அடிக்கல்!



(எஸ்.எம்.எம்.றம்றான்)
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் அன்னதான மடம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றது.

அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஆலயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் உதவியோடு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆலய தலைவர் வி.சுகிர்தகுமார் தலைமையில் இடம்பெற்ற அடிக்கல்நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கலந்து கொண்;டதுடன் அவரது இணைப்பு செயலாளர் ம.கண்ணதாசனும் கலந்து கொண்டார்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு பூஜைகள் இடம்பெற்றதுடன் அடிக்கல் நடும் நிகழ்வும் ஆரம்பமானது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கேதீஸ்வரக்குருக்கள் பூஜை வழிபாடுகளை நடாத்தி வைத்ததுடன் ஆலய முன்னாள் தலைவர் நா.அழகரெத்தினமும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மயூரி மற்றும் நிருவாக சபை திருப்பணிச்சபை மற்றும் மகளிர் அணியினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய நிருவாகம் முன்னெடுக்கும் சமூக பணி மற்றும் கல்வி அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் பாராட்டினார்.

மேலும் எதிர்காலத்திலும் தன்னால் முடிந்த உதவியினை இந்த ஆலயத்தின் அபிவிருத்தி பணிக்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

No comments: