(அஸ்ஹர் இப்றாஹிம்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர்களின் எழுச்சி மாநாடுசாய்ந்தமருது பெளஸி விளையாட்டு மைதானத்தில் கடந்த(24) சனிக்கிழமை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும்,மயோன் கல்வி அபிவிருத்தி அமைப்பின் தவிசாளருமான ரிஸ்லி முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி இளைஞர் மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமானறிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ,இளைஞர் அமைப்பினர் ,பெண்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.கலை,கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
No comments: