(அஸ்ஹர் இப்றாஹிம்)
நீர் இணைப்பொன்றை பெறுவதில் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்துடன் வசிக்கின்ற சில சமுர்த்தி பயனாளர்களை இனங்கண்டு மத்தியமுகாம் மற்றும் சாளம்பைக்கேணி-03 எனும் பிரதேசங்களில் வசிக்கின்ற பயனாளர்களுக்கு குடி நீர் இணைப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நீர் இணைப்புக்கள் வை.டபிள்யூ.எம்.ஏ. பேரவையின் ஒருங்கிணைப்பில்; ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது நாவிதன்வெளி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.சீ.ஏ.நஸார் ஹாஜி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் அல்-அமானா சமூக சேவை அமைப்பின் தலைவருமான எம்.பி.நவாஸ், மத்திய முகாம் பள்ளிவாசல் தலைவர் எம்.கே.பயாஸ், மத்திய முகாம் முஸ்லிம் காங்கிரஸ் கிளைக் குழுத் தலைவர் நெளபர், சாளம்பக்கேணி-04 முஸ்லிம் காங்கிரஸ் கிளைக் குழுத் தலைவர் ஆர்.பசில், சாளம்பக்கேணி-03 கிளைக் குழு உறுப்பினர் ஏ.அப்துல்லாஹ் மற்றும் ரஹ்மத் மன்சூர் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினருமான எம்.ஜே.எம்.பாயிஸ் மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்களான எம்.எம்.றியாஸ், யூ.எல்.ஏ.ஜப்பார், பயனாளர்கள், பிரதேசவாசிகள், நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.
ReplyReply to allForward
You received this via BCC, so you can't react with an emoji
ReplyReply to allForward
You received this via BCC, so you can't react with an emoji
No comments: