(அஸ்ஹர் இப்றாஹிம்)
புத்தளம் வலைய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் புத்தளம், திகழி முஸ்லிம் மகா வித்தியாலய அணி முதலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டல் வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.பாரிஸ், உடற்கல்வி பயிற்சியாளர் எம்.என்.எம் டில்ராஸ் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோருக்கு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.ஏ.றஸாக் உள்ளி்ட்ட கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
No comments: