Verité Research ஆய்வில் தெரிவிப்பு

அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக வெரிடே ரிசர்ச் என்ற (Verit Research) சுயாதீன ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து இந்த நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் பொது மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் சமீபத்திய பொருளாதார செயற்பாடுகள் குறித்து நாடுமுழுவதும் “நாட்டு மக்கள் என்ன நினைக்கின்றார்கள்” என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, கடந்த பெப்ரவரி மாத்தில் அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் 07 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆய்வுகளுக்கு அமைவாக இது 24 வீதமாக அதிகரித்துள்ளது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 28 வீதமானோர் தற்போதைய பொருளாதார நிலையை விசேடமானது அல்லது சிறப்பானது என வகைப்படுத்தியுள்ளனர்.
இது கடந்த பெப்ரவரி மாதத்தில் காணப்பட்ட மட்டத்திலிருந்த 09 வீத மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாகும் என்றும் வெரிடே ரிசர்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதார நிலை மேலும் மேம்படும் என நம்பும் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 09 வீதமாக இருந்த நிலையில் இம்மாதம் இது முப்பது வீதமாக அதிகரித்துள்ளதாக வெரிட்டி ரிசர்ச் சர்வே நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆய்வு ஜூன் மாதம் 28 முதல் ஜூலை 06 வரை மேற்கொள்ளப்பட்டதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments: