News Just In

7/13/2024 07:26:00 PM

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் கல்லூரி தினம்!




மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் 149வது ஆண்டு நிறைவு விழா, கல்லூரி அதிபர் சாந்தகுமார் தலைமையில் சிறப்பாகஇன்று நடைபெற்றது. கல்லூரி பழைய மாணவர்கள், கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பாடசாலை சமூகத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இடம்பெற்றன.

149வது ஆண்டு நிறைவைச் சிறப்புக்கும் வகையில், கேக் வெட்டப்பட்டு, நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து கல்லூரியின் பாரம்பரியங்களை எடுத்துக்காட்டும் வகையிலான நடைபவனியொன்றும் இடம்பெற்றது.
நடை பவனி நகரின் பிரதான வீதி ஊடாக பயணித்து, மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் நிறைவுற்றது

இந்து கல்லூரி மைதானத்தில், கல்லூரி சமூகத்தினர் மற்றும் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டி என்பன இடம்பெற்றன. பழைய மாணவர்களால் கல்லூரியின் அபிவிருத்திக்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டதோடு, 1980ம் ஆண்டு காலப்பகுதியில் கல்வி கற்ற, கல்லூரி பழைய மாணவர்களினால் அமரத்துவம் அடைந்த கல்லூரி முன்னாள் அதிபர்களான டி.எஸ்.கே.வணசிங்க மற்றும் டி.கனக சுந்தரம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக, பாண்ட் வாத்தியக் கருவிகளும்அன்பளிப்புச் செய்யப்பட்டன.

கல்லூரியின் முன்னாள் ஓய்வு நிலை அதிபர்கள், ஆசிரியர்கள்,கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் நிகழ்வுகளில்
கலந்து கொண்டனர்

No comments: