News Just In

6/06/2024 08:28:00 PM

இலங்கையில் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத்தியவர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி!





ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றியதால் பெறுபேறுகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதே தவிர அவை இரத்து செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானினால் (Mujibur Rahman) நேற்று (05.06.2024) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"க.பொ.த உயர்தர பரீட்சையின் போது காதுகளை மறைத்தவாறு ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு பரீட்சைக்கு தோற்றும் போது சூட்சமான முறையில் காதுக்குள் கருவிகளை வைத்திருக்க முடியும்.

இதன் காரணமாகவே, பரீட்சையின் போது காதுகள் தென்படும் வகையில் உடைகள் அணியுமாறு குறிப்பிடப்படுகிறது.

மேலும், ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றியதால் பெறுபேறு இரத்து செய்யப்படமாட்டாது. தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்” என விளக்கமளித்துள்ளார்

No comments: