News Just In

6/15/2024 10:11:00 AM

தமிழர் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவும் பா.ஜ.க!




இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரதெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிங்கள பௌத்தமயமாக்கல் இடம்பெற்று வருகின்றபோது, இந்தியாவின் பா.ஜ.கவின் விரிவாக்கமாக இருக்கின்ற சிவசேனையின் இலங்கை முகவர்கள், தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படுகின்றபௌத்த விகாரைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தில் இலங்கைக்கு எவ்வாறான நிலைமை காணப்படும் என்று கஜேந்திரன் எம்.பியிடம் சர்வதேச ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments: