News Just In

6/16/2024 07:12:00 AM

உக்ரைன் - ரஷ்ய மோதலுக்கு தீர்வு: ஜெலன்ஸ்கியிடம் மோடி எடுத்துரைப்பு!




ரஷ்ய - உக்ரைன் மோதலுக்கு தீர்வு பேச்சுவார்த்தைதான் என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம்(Volodymyr Zelenskyy) இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தாலியில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் ஜெலன்ஸ்கியை சந்தித்தபோதே இதனை கூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள மோடி, "விளாடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. போர் குறித்து, இந்தியா மனிதாபிமானத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையை தீர்வு என்று நம்புகிறது.

பேச்சுவார்த்தைதான் அமைதிக்கான வழி என்று நம்புகிறது" என்று கூறியுள்ளார்.

No comments: