News Just In

5/18/2024 04:14:00 PM

சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான தீர்மானம் மிக்க போட்டி தோனியின் பிரியாவிடை போட்டியாகவும் இது அமையலாம்!



சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான தீர்மானம் மிக்க இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று (18) இரவு பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (19 புள்ளிகள்) ராஜஸ்தான் றோயல்ஸ் (16 புள்ளிகள்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (15 புள்ளிகள்) ஆகிய 3 அணிகள் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதை ஏற்கனவே உறுதி செய்துகொண்டுள்ளன.

இந் நிலையில் ப்ளே ஓவ் சுற்று தகுதியைப் பெறப் போகும் நான்காவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டியிலேயே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி, சீரான காலநிலை நிலவும் பட்சத்தில் இந்த வருடத்திற்கான அதிசிறந்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்ல இன்னும் ஒரே ஒரு புள்ளியே சென்னைக்கு தேவைப்படுகிறது. இந்தப் போட்டி ஒருவேளை மழையினால் கைவிடப்பட்டால் ப்ளே ஓவ் சுற்றுக்குள் நான்காவது அணியாக சென்னை நுழையும்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டினால் மாத்திரமே ப்ளே ஒவ் வாய்ப்பை பெற முடியும்

No comments: