News Just In

5/09/2024 10:28:00 AM

மாகாண "மாஸ்டர் அத்லடிக் சம்பியன்ஸிப் - 2024 (Masters athletics championship - 2024) போட்டியில் கல்முனை வலய பாடசாலை இரு ஆசிரியர்கள் தங்கம் வென்று சாதனை.!



(எஸ்.அஷ்ரப்கான்)

மாகாண "மாஸ்டர் அத்லடிக் சம்பியன்ஸிப் - 2024 போட்டிகள் கடந்த 27, 28 ஆம் திகதிகளில் கண்டி போஹம்பர மைதாணத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் கல்முனை அல் - மிஸ்பாஹ் வித்தியாலயத்தின் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் 100 மீற்றர் ஹேடிஸ் (Hurdies) போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தினையும் அதேபோல கல்முனை ஸாஹிராக் தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.வை.எம். றகீப் 110 மீற்றர் ஹேடிஸ் (Hurdies) போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தினையும் தனதாக்கிக் கொண்டனர்.

இவர்களைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு (08) கல்முனை வலயக் கல்வி பணிமனையில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜிம் தலைமையில் நடைபெற்ற போது இரு ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர்.


இந்த நிகழ்வில் கல்முனை வலய உடற்கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம்.முத்தாரிஸ் மற்றும் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.அன்சார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments: