News Just In

4/07/2024 12:26:00 PM

பன்றியின் சிறுநீரகத்தை பெற்றவர் வீடு திரும்பினார்!





பன்றி ஒன்றிடம் இருந்து மரபணு மாற்றப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை பெற்ற முதல் மனிதர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

அமெரிக்காவின் மசசுசெட்ஸ் பொது மருத்துவமனையில் இந்த அறுவைச்சிகிச்சையை பெற்றுக்கொண்ட 62 வயதான ஆடவர் இரண்டு வாரங்களின் பின்னர் (03) வீடு திரும்பியுள்ளார்.

மரபணு மாற்றப்பட்ட பன்றிகளிடம் இருந்து பெறப்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சைகள் கடந்த காலத்தில் தோல்வி அடைந்துள்ளன. இந்நிலையில் இந்த சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் வெற்றி வரலாற்று முக்கியம் வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

ரிச்சர்ட் ரிக் சலிமன் என்ற நோயாளி சிறுநீரக நோயின் கடைசிக் கட்டத்தில் போராடி வந்த நிலையில் உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்பட்டது என்று மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு கடந்த மார்ச் 16 ஆம் திகதி நான்கு மணி நேர சத்திரசிகிச்சை மூலம் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது. அவரது சிறுநீரகம் நன்றாக இயங்குவதாகவும் தொடர்ந்து குருதி சுத்திகரிப்பு செய்ய வேண்டிய தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






No comments: