News Just In

4/28/2024 07:08:00 PM

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி!




2025ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாங்கள் மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் வருமானத்தை அதிகரிக்கும் ஏனைய மூலங்கள் தொடர்பாக கவனம் செலுத்துகின்றோம்.

இதுவரை இலங்கையில் 20 வீதம் நேரடி வரிகளும் 80 வீதம் மறைமுக வரிகளும் நடைமுறையில் இருந்தன. இன்று நேரடி வரியை 30 வீதமாகவும் மறைமுக வரியை 70 வீதமாகவும் மாற்றியிருக்கிறோம்.

எதிர்காலத்தில் நேரடி வரி 40 வீதமாகவும் மறைமுக வரி 60 வீதமாகவும் மாற வேண்டும்.
நேரடி வரியை அதிகரிக்கும் போது மூளைசாலிகளின் வெளியேற்றம் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. அப்படி ஒரு சிக்கலும் உண்டு.

அதனால்தான் நாங்கள் 2025ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

இலங்கையில் மறைக்கப்பட்ட பல சொத்துக்கள் காணப்படுகின்றன. எனவே சொத்து வரியை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அவற்றை செயற்றிறனாக்க முடியும்.

உலகின் பல நாடுகளில் சொத்து வரி உள்ளது. சொத்து வரி என்பதும் மக்கள் பயப்படுவார்கள். மக்களுக்கு சுமை ஏற்படும் வகையில் நாம் அதனைச் செய்யமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்

No comments: