
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே விதித்துள்ளார்.
அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
No comments: