பல வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று (21.03.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெரிய வெங்காயம், சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 4500 ரூபா சந்தை பெறுமதி கொண்ட மளிகைப் பொருட்களை உள்ளடக்கிய பொதியொன்றை அனைத்து சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் 3,480 ரூபாவிற்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments: