சுகாதாரத் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த தமது தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை இன்று (15) காலை 06.30 மணி முதல் கைவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, வருகின்ற திங்கட்கிழமை 19 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதனை அடுத்து, தமது கொடுப்பனவுகளில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 72 சுகாதார தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
No comments: