News Just In

2/14/2024 02:05:00 PM

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவித்தல்!




சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கல்வி அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக தேசிய பாடசாலைகளுக்கு 54 அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற நபர்களை நியமித்ததன் மூலம் அதன் பணி வினை திறனற்றதாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர வினாத்தாள்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படுகிறது. பெப்ரவரி இறுதிக்குள் அது முடிவடையும். அதன்பிறகு, நடைமுறை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

இவை அனைத்தும் நிறைவடைந்த பின்னர் சாதாரண தர பரீட்சை தொடங்குவதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிடும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்

No comments: