News Just In

2/10/2024 07:34:00 PM

திங்கள் முதல் அதிகரிக்கவுள்ள முட்டை விலை!




பண்டிகைக் காலத்தில் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டும் நிலை காணப்படுவதால் விலையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் முட்டையின் விலை 60 ரூபாயாக உள்ளது.

இதனிடையே, சதொச கடைகளின் மூலம் 43 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது அந்த கடைகளில் கிடைக்கவில்லை என வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: