News Just In

2/11/2024 05:38:00 AM

நாட்டை வந்தடைந்தார் மாவை: தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் இழுபறி!


தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பலாலி விமானநிலையம் ஊடாக மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

சிங்கப்பூருக்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவர் இன்றையதினம்(10.02.2024) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

எனினும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமானது நாளை நடைபெறாது என கட்சியின் உள்ளக வட்டாரங்களில் இருந்து அறியக்கிடைத்துள்ளது.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் குகதாசன் மற்றும் சிறீநேசன் ஆகியோருக்கிடையில் இணக்கப்பாட்டுடைய பேச்சுவார்த்தையானது கட்சியின் உயர்மட்ட தலைமைகளினால் இடம்பெற்று வரும் நிலையில் கட்சியின் மத்திய குழுக் கூட்டமானது நாளை இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 28.01.2024 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக மாநாடானது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது

No comments: