News Just In

2/21/2024 11:38:00 AM

சம்மாந்துறை 09ம் கிராம சேவகர் பிரிவுக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்.!




(எஸ்.அஷ்ரப்கான், கே.ஏ.ஹமீட்)

சம்மாந்துறை 09ம் கிராம சேவகர் பிரிவுக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்நேற்று (20) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில்நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், அரசியல் அதி உயர் பீட உறுப்பினர் ஏ.எம்.ஏ.அஸீஸ், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments: