News Just In

12/08/2023 10:11:00 AM

பெற்றோர்களை ஏமாற்றி வெளியில் சென்ற இரண்டு மாணவர்கள் பரிதாபமாக பலி! குருணாகலில் சம்பவம்




குருணாகல், பன்னல பிரதேசத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பம்புகுளிய பிரதேசத்தில் மணல் அகழ்வு காரணமாக மாஓயாவை அடுத்துள்ள குளத்தில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் வெலிஹேன மற்றும் தல்வகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த நிஹார கவிந்து நெத்மல் பீரிஸ் மற்றும் விஹங்க செனல் பெர்னாண்டோ புள்ளே ஆகியோர் ஆவார்கள்.

இவர்கள் மஹதெல்லவின் பாடசாலை நண்பர்களான இருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மைதானத்தில் விளையாட செல்வதாக கூறிவிட்டு இருவரும் குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பம்புகுளிய பகுதியில் உள்ள ஏரி போன்ற நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருவரது ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இரண்டு சைக்கிள்களும் இருந்தன. பொலிஸார் அப்பகுதி மக்கள் உதவியுடன் 2 சடலங்களையும் மீட்கப்பட்டதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: