News Just In

10/27/2023 10:34:00 AM

கொழும்பு – புறக்கோட்டையில் தீ பரவல்!





கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் தீ பரவியுள்ளது.

இந்த தீ விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments: