News Just In

10/16/2023 07:56:00 AM

இஸ்ரேலின் தொடர் எச்சரிக்கை : லட்சக் கணக்கில் இடம்பெயரும் மக்கள்!

இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் எச்சரிக்கைகளை அடுத்து காசாவின் வடக்கே உள்ள மக்கள் பெருமளவில் தெற்கு நோக்கிச் செல்வதாக ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பான OCHA அறிக்கை வெளியிட்டுள்ளது

இறுதியாகக் கிடைத்தத் தகவலின்படி 4.23 லட்சம் பேர் தெற்கு நோக்கிச் சென்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவ, இஸ்ரேல் எச்சரிக்கையால் காசாவில் பெருமளவில் மக்களின் இடம் பெயர்தல் நடக்கிறது.

நேற்று (15)வரை லட்சக்கணக்கானோர் காசாவுக்குள்ளேயே ஓரிடம்விட்டு இன்னொரு இடத்துக்குப் பெயர்ந்துள்ளனர். அதுவும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் இது மிகவும் அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு 11 மணியளவு நிலவரத்தின்படி 4,23,378 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் 64 சதவீதம் பேர் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் ஆதரவு அமைப்புகளின் பாதுகாப்பில் உள்ளனர்.

ஐ.நா. சார்பில் 102 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் 33,054 பேர் தஞ்சமடைந்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால் உயிருக்கு அஞ்சி 1,53,000 பேர் காசாவுக்குள்ளேயே வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: