News Just In

9/25/2023 05:44:00 AM

அவசர வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசு தீர்மானம்!

இலங்கையில் பின்னவல மற்றும் கித்துல்கல சுற்றுலா வலயங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவசர வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நேற்று (23.09.2023) இடம்பெற்றது.

குறித்த பிரதேசங்களுக்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் வேலைத்திட்டத்திற்கு தனியார் துறையினரின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments: