News Just In

8/05/2023 06:06:00 PM

மின்கட்டணத்தில் எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படமாட்டாது : இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு!

நடப்பு வருடத்தில் மின்கட்டணத்தில் எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையிடமிருந்து கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.​​மின் கட்டண திருத்தம் வருடத்திற்கு இரண்டு முறை மாத்திரமே அதாவது 06 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே இடம்பெறுவதாக தெரிவித்தார்.

மின்சார கட்டணத்தை திருத்துமாறு இலங்கை மின்சார சபை இந்த வருடத்தில் மூன்றாவது தடவையாக ஆணைக்குழுவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.

எனினும், இவ்வருடம் மின் கட்டண திருத்தம் இடம்பெறாது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: