
நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று கற்பாறைகள் தொடர்பான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது.
நாசாவின் மூத்த விஞ்ஞானி சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு, இலங்கையில் உள்ள சில பாறை அமைப்புகளுக்கும் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பாறை அமைப்புகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து ஆராய்வதற்காக தற்போது இலங்கைக்கு வந்துள்ளது.
இலங்கையில் நாசா விஞ்ஞானிகள் தமது ஆய்வுப் பயணத்தை முதலில் கினிகல்பலஸ்ஸ மற்றும் இந்திகொலபெலஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தென் மாகாணத்தில் உள்ள உஸ்ஸங்கொட பிரதேசத்துக்கு பயணிக்கவுள்ளனர்.
குறித்த பிரதேசங்கள் அவற்றின் தனித்துவமான புவியியல் அம்சங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதோடு, அவை ஆய்வுக் குழுவின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளன.
புவியியல் மற்றும் வானியல் துறைகளை இணைக்கும் இந்த ஆய்வானது, பூமிக்குரிய பாறைகள் மற்றும் தொலைதூர செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது.
இத்தகைய கண்டுபிடிப்புகள் பிரபஞ்சத்தைப் பற்றிய எமது அறிவை விரிவுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
No comments: