News Just In

6/27/2023 12:08:00 PM

சட்டவிரோத மண்அகழ்வினைத் தடுத்து நிறுத்தவும் !பிள்ளையான் MP

 
சட்டவிரோத மண்அகழ்வினைத் தடுத்து நிறுத்துமாறு பிள்ளையான் கோரிக்கை!



மகாவலி திட்டப் பகுதியில் மண் அகழ்வு உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை நிறுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மகாவலி மற்றும் மேச்சல்தரை தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாகக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன். இது நான் முதல் இருந்த நிலை.

பின்னர் நான் அரசியலுக்கு வந்தேன். மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அரசியல் நிர்வாக அதிகாரிகள் கலந்துரையாடி எதிர்காலத் திட்டம் நாங்கள் என்ன செய்ய வேண்டும் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை யோசிக்க வேண்டும்.

இந்த மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்கின்றனர். இதை யார் அகழ்கின்றார்கள்? எனவே இவ்வாறன சில விடையங்களை நிறுத்துமாறு அமைச்சருக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments: