News Just In

6/27/2023 11:32:00 AM

மகாவம்சம் உலக பாரம்பரிய சின்னம் ! யுனெஸ்கோ அறிவிப்பு

மகாவம்சம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு !





யுனெஸ்கோ “மகாவம்சத்தை” உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.

மகாவம்சம் என்பது இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கி, அதேவேளை பௌத்த மதத்தை முதன்மைப் படுத்தி பௌத்த பிக்குகளினால் பாளி மொழியில் ஏட்டுச்சுவடிகளில் செய்யுள் வடிவில் காலவரிசையாக குறித்து வைக்கப்பட்டவற்றை மூலமாகக்கொண்டு, தொகுக்கப்பட்ட இலங்கையின் பழமையான தொகுப்பு நூலாகும்.

இந்த நூல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில், பாளி மொழியில், மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்குவினால் தொகுக்கப்பட்டது.

அதன்படி, யுனெஸ்கோவினால் 2023 இல் புதிதாக அறிவிக்கப்பட்ட 64 உலக சர்வதேச ஆவண மரபுச் சின்னங்களில் மகாவம்சம் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: