News Just In

5/03/2023 07:41:00 AM

க.பொ. த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்!

க.பொ. த உயர்தர பரீட்சையின் சில பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நேற்றைய தினம் (02-05-2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கிறிஸ்தவம், நடனமும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

மேலைத்தேய சங்கீதம், சித்திரம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (07-05-2023) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments: