News Just In

4/12/2023 03:35:00 PM

நிரந்தர வருமானமில்லாத 130 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள்!




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பிரதேசத்தில் நிரந்தர வருமானமில்லாமல் பொருளாதார நெருக்கடி நிலையில் சிரமப்படும் இல்லாத இயலாத ஏழைக் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எம்.எல். செய்யது அஹமத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்ட 130 குடும்பங்களுக்கு அரிசி, கோழி இறைச்சி, சீனி, தேயிலை, பருப்பு உள்ளிட்ட பொருட்களடங்கிய சுமார் 3500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் ஏழைகளான பயனாளிகளுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்து உரையாற்றிய ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் செய்யது அஹமத், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான மக்கள் தமது தொழில்களை இழந்து நாளாந்த வருமானத்தை இழந்து ஜீவனோபாயத்திற்கு வழியின்றி தமது ஒருவேளை உணவுக்குக் கூட சிரமப்படுவதை அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில் கட்டார் நாட்டில் தொழில் புரியும் ஏறாவூர்ப் பிரதேச இளைஞர்களது நிதியுதவியைக் கொண்டு உதவியைக் கொண்டு இந்த உலருணவுப் பொதிகளை வழங்க முடிகிறது. இதைப்போல் மேலும் அதிகளவானோருக்கு உதவ பரோபகாரிகளின் உதவியை எதிர்பார்த்திருக்கின்றோம்” என்றார்.

நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.எம் நஜிமுதீன், ஒன்றியத்தின் அமைப்பாளர் எஸ்எம்எம். ஹனிபா உட்பட இன்னும் பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.


No comments: