News Just In

4/21/2023 11:49:00 AM

தேசிய மட்ட போட்டியில் 05 வெற்றிகளை பெற்று சாதித்தது கல்முனை கல்வி வலயம் !




நூருல் ஹுதா உமர்

தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டி முடிவுகள் (2022) இன் அடிப்படையில் இம்முறையும் தேசிய ரீதியில் கல்முனை கல்வி வலயம் சார்பாக போட்டியிட்ட 05 மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளதுடன் 05 பதக்கங்களும் சான்றிதழ்களும் கிடைத்துள்ளன.

கல்முனை கல்வி வலய பிரிவிலிருந்து இப்போட்டியில் கலந்துகொண்ட மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஸ்ரப் மகா வித்தியாலய மாணவன் (தரம் 10) எம்.எஸ். ஆகிப் அஹமட் முதலாமிடத்தையும், மருதமுனை கமு/கமு/ அல்- ஹம்ரா வித்தியாலய மாணவன் (தரம் 11) எஸ். அபாப் முதலாமிடத்தையும், கமு/கமு/ஆர்.கே.எம். பெண்கள் கல்லூரி மாணவி (தரம் 11) டீ. கஜினி இரண்டாம் இடத்தையும், கல்முனை கமு/கமு/மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி (உயர்தரம்) ஏ.ஆர். பாத்திமா ஹுதா இரண்டாம் இடத்தையும், மருதமுனை கமு/கமு/ அல்- ஹம்ரா வித்தியாலய மாணவி (தரம் 10) ஏ.எஸ். ஹயானி நான்காம் இடத்தையும் பெற்று பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவ் வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம், முழுமையாக தம்மை அர்ப்பணித்து பங்களித்த வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோகர்கள், இணைப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வலயக்; கல்வி அலுவலகம் சார்பாக தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

கல்முனை கல்வி மாவட்டத்தில் இருந்து போட்டியில் கலந்து கொண்டவர்களில் கல்முனை கல்வி வலயம் 05 இடங்களையும், சம்மாந்துறை கல்வி வலயம் 01 இடத்தினையும், அக்கரைப்பற்று கல்வி வலயம் ஒரு இடத்தினையும் தேசிய ரீதியாக சாதித்து தனதாக்கி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: