News Just In

2/23/2023 10:17:00 AM

யானைகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் !





நூருல் ஹுதா உமர்

எதிர்வரும் காலங்களில் காரைதீவு பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்கங்களினால் சொத்துக்கள், உடமைகள், பயிர்கள் மற்றும் தொழில் நிலையங்கள் போன்றனவற்றில் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்தல் மற்றும் காயமடைதல்,உயிராபத்துக்கள் ஏற்படுவதனை தடுத்தல் எனும் கருப்பொருளிலான முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கடந்த காலங்களில் யானைத்தாக்கம் காரணமாக காரைதீவு பிரதேசத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும், எதிர்வரும் காலங்களில் இப்பாதிப்புக்களை குறைப்பதற்கான சாத்தியமானதும், நிலையானதுமான தீர்வுகள் குறித்தும் மிக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டதோடு காத்திரமான முடிவுகளினை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வானது நிருவாக கிராம உத்தியோகத்தர், காட்டு யானைத்தாக்கத்திற்கு முகம்கொடுக்கின்ற 09 பிரிவுகளினதும் கிராம சேவகர்கள் (காரைதீவு-01,06,07,10,11,12, மாளிகைக்காடு-மேற்கு, மாவடிப்பள்ளி-கிழக்கு மற்றும் மேற்கு), வனஜீவராசிகள் பாதுகாப்பு நிறுவனம் சார்பான மாவட்ட அலுவலக பிரதிநிதிகள் மற்றும் வளத்தாப்பிட்டி நிலைய பொறுப்பதிகாரி, காரைதீவு பொலிஸ் நிலையம் சார்பான பொலிஸ் அதிகாரிகள், காரைதீவு மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களின் கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காரைதீவு பிரதேசத்தின் மத்திய மற்றும் மாகாண விவசாய போதனாசிரியர்கள், பிரதேச செயலகத்தின் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசத்தின் விவசாய அமைப்புக்கள் சார்பான பிரதிநிதிகள் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.





No comments: