News Just In

2/07/2023 06:08:00 PM

அத்தியாவசிய அரச சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக அரச வருமானம் மொத்தத் தேசிய உற்பத்தியின் 8.3 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நெருக்கடியான நிதிநிலைமையின் கீழ் அத்தியாவசிய அரச சேவைகளைப் பேணிச் செல்லல் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வருமானம் மொத்தத் தேசிய உற்பத்தியின் 8.3 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தநிலையில், தற்போதைய நிலையில் இருந்து மீண்டுவரும் வரைக்கும் பொதுச்சேவைகளை பேணிக்கொண்டு செல்வதற்கு அவசியமாக மேற்கொள்ள வேண்டிய மீண்டெழும் செலவினங்களுக்கு மாத்திரம் கட்டுநிதியை விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திறைசேரி செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments: