News Just In

2/08/2023 01:09:00 PM

“நூற்றாண்டை நோக்கிய பயணம் “!



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

“நூற்றாண்டை நோக்கிய பயணம் “எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின்75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாகஉணவுஉற்பத்திமற்றும்உணவுப்பாதுகாப்புதிட்டத்தினைமேன்படுத்துவதற்காக சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களினால்மேற்கொள்ளப்பட்ட சிறந்த வீட்டுத் தோட்டம் ,சிறந்த மர நடுகை மற்றும் சிரமதான பணியினை சிறப்பாகமேற்கொண்ட கிராம சேவகர் பிரிவு ஆகியவற்றுக்கு நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனிபா தலைமையில் நேற்று (07)சம்மாந்துறை பிரதேசசெயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் ,கௌரவ அதிதியாகநீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம் நவாஸ் ,அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் யும்.எம் அஸ்லம் , கணக்காளர் ஐ.எம் பாரீஸ்,கிராம சேவையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அலுவலகரிதியாக இடம்பெற்ற போட்டிகளில் போட்டிட்டு வெற்றியீட்டியவர்கள் என்ற அடிப்படையில் சம்மாந்துறைஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனிபா மற்றும் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவுக்கு பொறுப்பான வைத்தியர் கே.எல்.எம் நியாஸ் ,சம்மாந்துறை உயர்தொழிலுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எல் முஸ்தபா ,சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகே.டி.எஸ் ஜெயலத்,சம்மாந்துறை தொழிலுட்பக் கல்லூரியின் அதிபர் S.தியாகரஜா மற்றும் சம்மாந்துறைதொழிலுட்பக் கல்லூரியின் பதிவாளர் ஐ.பியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முதல் இடங்களை சிறந்த வீட்டுத்தோட்டம் செய்கை போட்டியில் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையும்,சிறந்த வீட்டுத்தோட்ட போட்டியில் சென்னல் கிராமம் 2 சேர்ந்த எ.எ மஜீட் ,சிறந்த மர நடுகைபோட்டியில் கருவாட்டுக்கல் 1 கிராம சேவையாளர் பிரிவு கிராம நிலதாரி ஐ.பாயிஸா ,சிறந்த சிரமதானத்தைசிறப்பாக மேற்கொண்ட கிராம சேவையாளர் பிரிவாக சென்னல் கிராமம்1 பிரிவு கிராம நிலதாரி ஐ.எல்.எம் ஒஜிஸ்கான்,கிராமிய பொருளாதர குழுக்கள் மற்றும் உணவு உற்பத்தி குழுக்கள் தெரிவு போட்டியில் தமிழ் பிரிவு 4 எச்.எம் சல்பியார் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக தற்காலபொருளாதார வீழ்ச்சியில் இருந்து மக்களைபாதுகாப்பதற்காகவும்சுயதேவைபொருளாதாரத்தைமேம்படுத்துவதற்காக அவர்களை ஊக்கப்படுத்துகின்ற நிகழ்வினை அம்பாரை மாவட்டத்திலேயே முதன் முதலில்அறிமுகப்படுத்தி சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

No comments: