News Just In

1/07/2023 04:47:00 PM

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பான உதவி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை ஆரம்பிக்கப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் பரீட்சை தொடர்பான உதவி வகுப்புகள், மாநாடுகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதை தடை செய்யுமாறு கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உயர்தரப் பரீட்சை காரணமாக ஜனவரி 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் மார்ச் 24 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: