News Just In

1/20/2023 01:17:00 PM

பனிரெண்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு!



சதொச விற்பனை நிலையத்தினால் 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலைகுறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 180 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 216 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் சிவப்பு அரிசியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 187 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் நாட்டரிசியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 179 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 210 ரூபாவாகும்.

வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 189 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 180 ரூபாவாகும்.

கீரி சம்பா அரிசியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 239 ரூபாவாகும்.

சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 370 ரூபாவாகும்.

காய்ந்த மிளகாய் கிலோ கிராமின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1730 ரூபாவாகும்.

கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 235 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் நெத்தலியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.

No comments: