சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (12) மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆலோசனையின் பின்னர் நிலவும் வானிலையின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (09) அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
No comments: