News Just In

11/04/2022 10:05:00 AM

குரங்கம்மை அறிகுறிகளுடன் கூடிய நோயாளி ஒருவர் முதன்முறையாக இலங்கையில் கண்டறியப்பட் டார் !




பல நாடுகளில் பரவலாகக் காணப்படும் குரங்கம்மை அறிகுறிகளுடன் கூடிய நோயாளி ஒருவர் முதன்முறையாக இலங்கையில் கண்டறியப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் பிரிவின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து இலங்கை வந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 கொப்பளங்கள், வீங்கிய நிணநீர் முனைகள் போன்ற அறிகுறிகளுடன் அவர் பாலியல் நோய் பிரிவிற்கு செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அப்போது அறிகுறிகளில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அவர் மற்றும் 6 பேரின் இரத்த மாதிரிகளை கடந்த 2 நாட்களுக்கு முன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரது இரத்த மாதிரிகள் மூலம் அவருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உலக சுகாதார பிரிவின் ஆதாரங்களுக்கமைய, குரங்கம்மை ஒரு வைரஸ் நோயாகும். இது விலங்குகளிடமிருந்து, சுற்றுச்சூழலில் இருந்து மனிதர்களிடையே பரவுகிறது.

இந்த நோய் பரவல் காரணமாக உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: