
(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக, கல்வி அபிவிருத்தி குழு ஏற்பாடு செய்த தரம் ஐந்து மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு சனிக்கிழமை (22) மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.அலியார் ஹாஜியார் தலைமையில், கல்வி அபிவிருத்திக் குழு தலைவர் கே.பீ.எஸ்.ஹமீடின் வழிகாட்டலில் இடம்பெற்ற இக் கல்வி கருத்தரங்கில் மீராவோடை அமீர் அலி, செம்மண்ணோடை அல் ஹம்றா, மீராவோடை உதுமான், மாஞ்சோலை அல் ஹிறா, பதுரியா நகர் அல் மினா ஆகிய ஐந்து பாடசாலைகளில் கல்வி கற்கும் 250 இற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் மீராவோடை கல்வி அபிவிருத்தி குழு செயலாளரும் மீராவோடை அமீர் அலி வித்தியாலய அதிபருமான எம்.எம்.எம்.மஹ்ரூப், மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் கே.எல்.எம். சபாஹிர் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments: