
!
நூருல் ஹுதா உமர்
மருதமுனை ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஜனாஸா வாகனத்துக்கு வினைத்திறனுடன் இயக்க தேவையான மின்கலம் (வெற்றறி) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் மருதமுனை கிளை பிரதித்தலைவர் மௌலவி எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானாவின் (நளீமி) தலைமையில் மஸ்ஜிதுன் நூர் ஜும்மாப்பள்ளிவாசலில் புதன்கிழமை இரவு இடம்பெற்றது.
பகிரங்கமாக செய்யப்படும் நன்கொடைகள், அன்பளிப்புக்கள் பிறரையும் மற்றவருக்கு உதவ தூண்டும் என்ற அடிப்படையில் லண்டன் மாநகர என்லைட்டன் அகடமி விரிவுரையாளர் அப்துல் சமட் பதியூதீனினால் (நளீமி) அன்பளிப்பு செய்யப்பட்ட மின்கலங்களை கையளிக்கும் இந்நிகழ்வில் மருதமுனை உலமா சபையின் செயலாளர் மௌலவி எஸ்.எல். றியாஸ் (நளீமி), மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பெரியபள்ளிவாசல் தலைவர் பேராசிரியர் ஐ.எல்.எம். மாஹீர், மஸ்ஜிதுல் நூர் ஜும்மாப்பள்ளிவாசல் செயலாளர் ஏ.ஏ. புழைல், மஸ்ஜிதுன் நூர் ஜும்மாப்பள்ளிவாசல் கட்டிடக்குழு செயலாளர் எம்.ஐ.எம். வலீத், ஜனாஸா நலன்புரி சங்க இணைப்பாளர் சட்டத்தரணி எம்.எம். முஅஸ்ஸம் (நளீமி), கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மௌலவி எம்.எம்.நதிர் (நளீமி) உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஜனாஸா வாகனத்தின் தேவைகள், ஜனாஸா நலன்புரி அமைப்பின் செயற்பாடுகள், பிரதேச மார்க்க விடயங்கள் தொடர்பில் இங்கு கருத்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments: