News Just In

8/04/2022 02:46:00 PM

மாளிகைக்காட்டில் சட்டவிரோதமாக சிலை வைக்கும் முயற்சி முறியடிப்பு !




மாளிகைக்காடு நிருபர்

இன்று காலை சமூக நல்லிணக்கத்தை குழப்பும் நோக்கில் காரைதீவை சேர்ந்த சிலரினால் முன்னெடுக்கப்பட்ட சிலை வைக்கும் முயற்சி மாளிகைக்காடு பிரதேச சமூக ஆர்வலர்களினால் முறியடிக்கப்பட்டது. காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு மேற்கு பிரதேசத்தில் பிரதான வீதியில் அமைந்துள்ள யூசூப் லெப்பை மொஹம்மட் றியால் எனும் பாதுகாப்பு படை உத்தியோகத்தருக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமாக காரைதீவு பிரதேச சபையினால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் பேருந்து நிழற்குடை (பேருந்து தரிப்பு இடம்) கூரையின் மேல்தளத்தில் இந்துமத சிலையொன்றை நிறுவ சிலர் முயற்சிகளை மேற்கொண்டு நிர்மாண வேலைகளை இன்று காலை முதல் செய்து வந்தனர்.

இதனையறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில், அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உட்பட சமூக ஆர்வலர்கள், பிரதேச இளைஞர்கள் சிலை வைக்க முற்பட்டோரிடம் சிலை வைப்புக்கான அனுமதிகள் மற்றும் நியாயப்பாடுகள் தொடர்பில் கேட்டதுடன் சிலை வைப்பானது சட்டவிரோதமாக இடம்பெறுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டவுடன் சிலை வைப்பு நடவடிக்கையை முறியடித்து சிலை வைக்க முற்பட்டோரை திருப்பி அனுப்பிவைத்தனர்.

இந்த சிலை வைப்பானது காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறிலின் பணிப்புக்கு இணங்க இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் கூட சபை தீர்மானங்களோ அல்லது சபை அனுமதியோ பெறப்பட்டிருக்க வில்லை என்பதுடன் காணி உரிமையாளர் யூசூப் லெப்பை மொஹம்மட் றியால் என்பவருக்கு தெரியப்படுத்தவும் இல்லை. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி பெறாமல் இந்த சிலை வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ.எம். அஸ்மீர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். எனக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமாக காரைதீவு பிரதேச சபையினால் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை (பேருந்து தரிப்பு இடம்) தொடர்பில் சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு பல்வேறு தரப்பு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சட்டவிரோத சிலை வைப்பு தொடர்பில் சட்டத்தின் மீதான நடவடிக்கைகளை தான் முன்னெடுத்து வருவதாகவும் காணி உரிமையாளர் யூசூப் லெப்பை மொஹம்மட் றியால் தெரிவித்தார்.


No comments: