News Just In

6/21/2022 12:14:00 PM

வாகரை விவசாயிகள் கெக்கரி செய்கையில் ஈடுபட்டு அந்நிய செலவாணியை சம்பாதிப்பதற்கு வழிவகுத்துள்ளமையை மனதார பாராட்டுகிறேன் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா சம்பத் கருத்து




(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)

தற்பொழுது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நாட்டுக்கு உதவும் வகையில் வெளிநாட்டு அந்நிய செலவாணியை சம்பாதிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டவாகரை விவசாயிகள் கெக்கரி செய்கையில் ஈடுபட்டு ஏற்றுமதிக்கு வழிவகுத்துள்ளதை மனதார பாராட்டுவதாக கிழக்கு மாகாண ஆளுநர்அனுராதா ஜகம்பத் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஏற்பாட்டில் உலக வங்கி உதவி திட்ட ஏற்பாட்டில் நவீனமயமாக்கல் விவசாய திட்டத்தின் கீழ் வாகரைஊரியன்கட்டு விவசாயிகளுக்கு களை வெட்டும் இயந்திரங்களை வழங்கி வைத்த பின் நடைபெற்ற நிகழ்வில் சி றப்புரை ஆற்று கையில் இந்த பாராட்டை தெரிவித்தார் .

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணா கரன் மற்றும் நவீனமயமாக்கல் விவசாய திட்டத்தின் அதிகாரிகள் பலரும் இ ங்கு பிரசன்னமாகியிருந்தனர். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்;- எதிர் காலத்தில் கிழக்குமாகாண விவசாயிகள் நாட்டுக்கு தேவையான முழு போஷாக்குள்ள உணவு வகைகளை உற்பத்தி செய்வதற்கு தேவை யான உர வகைகள் மற்றும் விதை வகைகள் ஏனைய உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்;- வாகரை பிரதேச விவசாயிகள் கெக்கரிக்காய் உற்பத்தியில் ஈடுபட்டு வெளிநாட்டு அந்நிய செலவாணியை சம்பாதிப்பதற்கு வழி வகுத்துள்ளார்கள் இவர்களின் கடமை உணர்வை நான் மனதார பாராட்டுகிறேன் இங்கு இப்பிரதேச விவசாய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களும் கொண்ட பொதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன .

கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி. எம். உசைன் நவீனமயமாக்கல் விவசாய திட்டத்தி ன் அதிகாரிகள் விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் பலரும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.


No comments: