News Just In

4/09/2022 05:28:00 PM

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஒத்திவைப்பு !





இலங்கைக்கு உதவி வழங்குவது குறித்து ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் நேற்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் எதிர்வரும் 18 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டடமிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் குழு இன்னும் அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி நெருக்கடிக்குத் தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: