News Just In

1/12/2022 06:45:00 AM

நாட்டில் மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது!

நாட்டின் சில பகுதிகளில் மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு காரணமாக மக்கள் மெழுகுவர்த்தியை அதிகம் பாவிப்பதோடு, எதிர்காலத்திற்கும் சேகரிப்பதனாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் எதிர்காலத்தில் நாட்டில் மெழுகுவர்த்திகள் உற்பத்தி செய்யப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உப உற்பத்தியாகவே மெழுகுவர்த்திகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் காரணமாக மெழுகுவர்த்தி உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: