News Just In

1/09/2022 06:46:00 AM

3வது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியம்!

சிரேஷ்ட பிரஜைகள் வைரஸ் தொற்றுக்கு எதிரான 3 வது டோஸ் தடுப்பூசியை அவசியம் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதனால், வயோதிப பெற்றோர்களை 3 வது டோஸ் தடுப்பூசிக்கு உட்படுத்துமாறு, இலங்கை முதியோர் சங்கத்தின் தலைவரும் ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியருமான சரத் லேகம்வசம் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முதியோர் கொவிட் நோயால் மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும், தொற்று ஏற்படும் போது சிக்கல்கள் மற்றும் மரணங்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிக இருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை உணர்ந்து முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

தற்போது சிலர் தங்கள் வயதான பெற்றோருக்கு கட்டாயமாக 3 வது டோஸ் தடுப்பூசியை வழங்குவதா? என்று கேள்வி எழுப்புகின்றனர். பலர் தமது வயோதிப பெற்றோர்களுக்கு, பல்வேறு நோய்கள் காணப்படுவதனால் அவர்களுக்கு 3 வது டோஸ் தடுப்பூசியை வழங்க தயக்கம் காட்டுகின்றனர்.

வயதான பெற்றோர்களுக்கு அதிக நோய்கள் காணப்படுமிடத்து, அவர்கள் 3 வது தடுப்பூசியை கட்டாயமாகப் பெற வேண்டும். ஏனெனில் அவர்கள் இறப்பு மற்றும் பல்வேறு நோய் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதனால் அவர்கள் கட்டாயமாக 3 வது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments: